போதைப்பொருட்களுடன் யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் கைது

382 0

மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் படகு சவாரி செய்வதற்காக வருகை தந்த இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹசீஸ், கேரள கஞ்சா, போதை மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, வெலிகம, வத்தள, கனேமுல்ல, குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.