அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது-லக்ஷமன்

336 0

அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது. பொதுஜன பெரமுனவின் கொள்கைத்திட்டம்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என  பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து  இடம்பெறும்  பொதுத்தேர்தலிலும்  பொதுஜன  பெரமுனவே வெற்றிப் பெறும் என்பதில்  எவ்வித மாற்றமும் கிடையாது.

தேர்தலில் பெற்றிப் பெறுவதற்கான அனைத்து  செயற்திட்டங்களும் தற்போது  கிராமிய மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து பங்காளி கட்சிகளையும் ஒன்றினைந்து ஒருமித்த கொள்கையினை உள்ளடக்கிய  பொது கூட்டணி தற்போது  அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் பொது கொள்கைத்திட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.