ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

359 0

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த விஜயத்தினையடுத்து அவர் மாலைதீவிற்கும் பயணம் செய்யவுள்ளார். இன்று தொடக்கம் 16ஆம் திகதி வரை அவர், இலங்கையிலும் மாலைதீவிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளும் தமது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் சிறந்த அனுபவ பரிமாற்றத்தை உருவாக்கும் நோக்கிலும் இவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ள அவர், அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் இராஜதந்திரிகளுடனும் அவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.