வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை தன்மையற்றவை!

278 0

எந்தவொரு அடிப்படைத் தன்மையும் இன்றி வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிரணியினர் முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.  

 

அலரிமாளிகையில் நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாது;

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக எதிரணியினர் முன்வைக்கும் சகல குற்றச்சாட்டுக்களும் நியாயமற்றவையாகும். அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை கொண்டுச் செல்வது நாட்டின் எதிர்காலத்துக்கு அது பாதகமாக அமையும்.

இன்று சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் எதிர்காலத்தில் அவர்கள் ஆட்சி அமைத்தால் சீனாவின் உதவிகளை பெற்றுக்கொள்வார்கள். சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து நாட்டை முறையான வழியில் கொண்டுச்செல்லவே முயற்சிக்கிறோம். ஆகவே குறைக் கூறி நாட்டின் எதிர்காலத்தை வீணடிக்காமல் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசி தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.