வெல்லம்பிடிய செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

270 0

ஷங்ரில்லா ஹோட்டலின் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரி இப்றாஹிம் இன்ஷாப் அஹ்மட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் ஊழியர் அப்துல்லா  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதலுக்கு பின்னர் பெரிதும் அவதானம் செலுத்தப்பட்ட இந்த செப்பு தொழிற்சாலையிலே குண்டு தாயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் இந்த செப்பு தொழிற்சாலையில் சேவையாற்றிய 10 ஊழியர் கைது செய்யப்பட்டனர். இதில் 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பத்தாவது சந்தேக நபரான கருப்பையா இராஜேந்திரன் எனப்படும் அப்துல்லா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பயங்பரவாத தடுப்பு பிரிவினர் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதிவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.