தற்போதைய அரசாங்கத்தை எதிர்காலத்தில் வரும் ஏதாவது ஒரு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை, திக்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முதலில் புலனாய்வு பிரிவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலனாய்வு பிரிவின் உயரதிகாரியான சம்மி கருணாதாஸ கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நாட்டை வீழ்ச்சியடைய செய்ததாகவும் தாக்குதலின் பின்னர் புலனாய்வு பிரிவின் அருமை புரிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

