ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான உபாலி தென்னகோன் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதல் விவகாரத்தில் திரிப்போலி முகாமின் இராணுவ வீரர் ஒருவரைக் கைதுசெய்ய சட்ட மா அதிபர், அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, உபாலி தென்னகோன் பயணித்துக்கொன்டிருந்த வாகனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்துக்கு இடமான கைவிரல் ரேகைக்கு உரிய இராணுவ வீரரையே இவ்வாறு கைதுசெய்ய இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

