கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஆணொருவர் பலியாகியுள்ளார். 

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் ரயில் பாதையில் உறங்கிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் காணக்கூடிய எவையும் கிடைத்திராத நிலையில் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியிலேயே கடந்த 25 ஆம் திகதி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.