இலங்கை தேயிலையின் சர்வதேச சந்தை விலையில் வீழ்ச்சி!

237 0

இலங்கையின் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை குறைவடைந்து வருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் லலித் ஒபேசேகர, எக்கனொமி நெக்ஸ்ட் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தரமான தேயிலை என்பது, ஏனைய தேயிலை ஏற்றுமதி நாடுகளது தேயிலைக்கான விலையை விட அதிகமானதாக இருக்கும். இலங்கையின் தேயிலை விலை சடுதியாக குறைவடைந்து வருகிறது.

இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை தேயிலையின் விலை 41 ரூபாய் 64 சதத்தால் வீழ்ச்சி அடைந்து, 574 ரூபாய் 90 சதமாக பதிவாகியுள்ளது.

இந்த விலை கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 616 ரூபாய் 54 சதமாக நிலவியது.

தேயிலை மலைகளில் பழைய தேயிலை மரங்களே இருக்கின்றன என்ற காரணம், தேயிலையின் தரத்தை நிர்ணயிக்காது. உரிய தருணத்தில் தேயிலை மரங்களை வெட்டி புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையை விட குறைவான விலையில் தேயிலையைத் தருகின்ற நாடுகளிடம் சர்வதேச தேயிலை இறக்குமதி நாடுகள் செல்கின்றன” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.