உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

394 0
றக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றக்குவானை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்பொது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, டி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கோரளைகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.