எது பயங்கரவாத தாக்குதல்?

236 0

‘பலவீனமான எம் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்.“   என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் .

1987 ஜூலை 05 ஆம் நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் கரும்புலித்தாக்குதல் இடம்பெற்றது. கப்டன் மில்லர் முதற் கரும்புலியாக காவியமானதை தொடர்ந்து நூற்றுக்காணக்கான வீரர்கள்  கரும்புலிகள் என்ற நாமத்தை சுமந்து தம் உடலோடு வெமருந்தை கட்டி உயிரை ஆகுதியாக்கினார்கள்.

கரும்புலிகளின் அடுத்த பரிணாமம் மறைமுக கரும்புலிகள். இவர்கள் எதிரியின் குகைக்குள்ளே சென்று தமது முகத்தை மறைத்து  நீண்டகாலம் வலிகளுடன் காத்திருந்து தம்மையும் அழித்து எதிரியையும் அழித்த அற்புதபிறவிகள். இவர்களது வீரச்சாவு பெற்றோருக்கோ, சகோதர்களுக்கோ, உற்றாருக்கோ உறவினருக்கோ, தோழர்களுக்கோ என்றுமே தெரியவந்ததில்லை. ஒருசிலருக்குள் அவர்களின் தியாகங்கள் அடங்கிப் போயின.

கரும்புலிகள் படையணியானது தரை, கடல்,வான் என எல்லா திசைகளிலும் காவியம் படைத்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நாளில் வணக்கம் செலுத்தும் நாள் தான் ஜூலை ஐந்தாம் நாள்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிங்கள அரச பேரினவாதத்தால் ஏவப்ப்ட  காடையர்கள்  தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து தனதுகோரப்பற்களை தமிழர்கள் மீது பதித்தது. .இது 83 இல் . அதற்கான பதிலை முதற்கரும்புலி 87 ஜூலையில் கொடுத்தான்.

ஜூலை  தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத மாதம் ஆகும். கரும்புலிகளின் தியாகத்தை உலகம் உணர்ந்து கொண்ட அதே வேளை .பேரினவாதங்கள் கிலி கொண்டன . உலக பயங்கரவாத குழுக்கள் இந்த வழியை தமது அற்ப  சொற்ப நோக்கத்திற்காக பயன்படுத்துவது ஒரு சாபக் கேடான செயல்.

மக்களுக்காக தியாகம் செய்து காவியமானவர்களையும் மக்களை அழிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மக்கள்  வெவ்வேறாக புரிந்து கொள்ள வேண்டும்.

தியாகிகளையும் பயங்கரவாதிகளையும் மக்கள் தெளிவாக பிரித்து அறிந்து  கொள்ள வேண்டும்.