இராணுவத்தினர் வசமுள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் மேலும் வெளிமாவட்டங்களுக்குச் செல்கின்ற விமானப் பயணச்சீட்டுக்களுக்கு குறைந்த பணம் அறவீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் பலாலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் தான் பலாலி நிலையம் சர்வேதச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அண்மையில் உள்ள மக்கள் ஒரு காலமும் பாதிக்கப்படக்கூடாது. மக்களின் காணிகள் விமானி நிலைத்திற்குள்வாக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

