இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: 5 பாக். ராணுவ வீரர்கள் பலி

220 0

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள ஜாம்ப் பகுதி இந்திய-பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதி இரு நாட்டின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ரானுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.