சொத்து சேகரிப்பு – FCIDஇல் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

339 0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10.15 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்தும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அவர் சேகரித்த சொத்துகள் தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.