சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

323 0

நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச சுற்றுலாப் பயணத்துக்கு சிறந்த நாடு என, உலகில் பிரபலமானதும் பயண வழிகாட்டியுமான ‘த லோன்லி பிளானட்’ சஞ்சிகை மீண்டும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்களால் சில நாடுகள் இலங்கைக்கான பயணத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், பல நாடுகள் தடையை நீக்கியுள்ளன.

எனினும், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் பயணத்தடையை இதுவரையில் நீக்கவில்லையென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.