லொறி மோதியதில் நபர் ஒருவர் பலி

344 0
மாதம்பை, மெல்லவாகார பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (03) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாதம்பை, மெல்லவாகார பகுதியை சேர்ந்த குரணகே பீட்டர் எனும் 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் மாதம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.