50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி

253 0

முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து இரத்தினபுரி  பலாங்கொடை வீதியின் பெரகெட்டிய சந்தியில் இன்று காலை சம்பவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக பலாங்கொடைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.