சிறீலங்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியிடம் 3 மணிநேர விசாரணை!

36747 0

DIG-Chandra-Wakistaதீவிரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் தலைவரான (ரிஐடி) ஓய்வு பெற்ற பிரதிக் காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம் சிறீலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் 3 மணிநேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத தங்கம் உட்பட பெறுமதியான பொருட்கள் தொடர்பாகவே விசாரணை நடாத்தப்பட்டது. அத்துடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சந்தேக நபருக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒன்றை பரிமாற்றம் செய்ததும் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.