இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!

9039 0

mangala-genevaஇறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, ஐநாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரச் செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் உப மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த மாநாட்டில் போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,

போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்காது என்றே நாங்கள் நம்புகின்றோம். ஆனால் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் விசாரணையும் நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இறுதிப் போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமானதாகும். கொத்துக் குண்டுகள் தொடர்பாக அண்மையில் வெளியான குற்றச்சாட்டுத் தொடர்பாக ஐநா அறிக்கையிலும் விசாரணை நடாத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment