ஹூலோகம் பகுதியில் விபத்தில் ஒருவர் பலி

317 0

நிக்கவெரட்டிய  – ஹூலோகம்   பகுதியில்  இடம் பெற்ற  வாகன  விபத்தில்   நபரொருவர்  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று  சனிக்கிழமை  காலை   6 மணியளவில சந்தைக்கு  பொருட்களை ஏற்றிச் சென்ற  சிறிய ரக  லொறியொன்றும்   ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை  ஏற்றிச்சென்ற  பஸ் வண்டியொன்றும்  நேருக்கு  நேர்  மோதியமையினாலேயே  விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த   லொறிச் சாரதி  மற்றும்  பஸ் வண்டியில்  பயணித்த 17 பேர்   சிகிச்சைக்காக நிக்கவரெட்டிய  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதையடுத்து  லொறி  சாரதி  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒலுபலியாவ  , மஹங்கிரில்ல  பகுதியை  சேர்ந்த  62 வயதுடைய  வன்னியாராச்சி  முதியன்சேலாகே  கப்புறு  பண்டா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,  பஸ்ஸில்  சென்ற   17 பேர்  சிறிய  காயங்களுக்கு  உள்ளானதுடன், நிக்கவரெட்டிய  வைத்தியசாலையில்  சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.  விபத்ததுடன்  தொடர்புடைய பஸ்  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.