தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக மாவை தெரிவு!

375 0
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தொிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதா் முன்னணி மாநாடு மற்றும் வாலிப முன்னணி மாநாடு ஆகியனவும் இன்று  நல்லுாா் இளங்கலைஞா் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தொிவு இடம்பெற்றது. அதற்கமைய தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தொிவு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழு தொிவில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினா் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவா்கள், பொதுச்சபை உறுப்பினா்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு, நாளை காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகி, தொடர்ந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு இடம்பெறவுள்ளது.