வவுனியா காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

365 0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில்  பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்தசில்வா தலைமையிலான குழுவினர் குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மரமொன்றின் அடிவாரத்தின்கீழ் பிளாஸ்ரிக் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில், சுமார் 25இற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் மற்றும் ஆர்.பீ.ஜீ ரக வெடிகுண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.