ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் -பியல்

549 0

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் மரண தண்டன  நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த டிசில்வா தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஜனாதிபதி இன்னும் இரண்டு வார காலத்திற்குள் மரண தண்டனையினை நிறைவேற்றுவதற்கு உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இதனை வரவேற்கின்றோம். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவோம். இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும் கிடையாது.

மத்திய வங்கியின் பினைமுறி மோசடிகாரர்களுக்கு அதியுச்ச தண்டனையாக மரண தண்டனையினை வழங்க வேண்டும் என்றும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கடந்த வாரம் களுத்துறை பொது வைத்தியசாலையில் அரச  வைத்திய சங்கத்தினர்  அமைதியான முறையில் மக்களின் தீர்மானங்களை கோரும் போது  அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளமை ஜனநாயகம் தொடர்பில் கருத்துரைக்கும் அரசாங்கத்தின்  சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.