ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவர் கைது

383 0

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து  கடந்த 24 ம் திகதி கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 24 ம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் 36 வயதுடைய  நபர் ஒருவரை  கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை பயிற்சி பெற்ற அம்பாந்தோட்டை முகாமிற்கு  கொண்டு சென்று அங்கு வைத்து பயிற்சி பற்றிய ஒத்திகையிலான விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை 3 மாதகால  பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.