‘ஜனாதிபதி – பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே’- ஹர்ஷன

358 0

முரண்பாடுகளுக்காகவும் குறைபாடுகளுக்காகவும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது போன்று 19 ஆவது  அரசியலமைப்பு  திருத்தத்தில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் கலந்துரையாடலின் மூலம்  தீர்வுக்காண வேண்டும்.  கலந்துரையாடல்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள்  உள்ளது.  நாட்டின் தற்போதுள்ள நிலைமையில்  இந்த முரண்பாட்டு நிலை நீடிக்குமாக  இருந்தால்  தொடர்ந்து  நாட்டில் சிக்கல்கள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

இந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள வேணடும் எனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்  என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அன்றி வேறு ஒருவர் வெற்றி பெறுவாராக இருந்தால் பாராளுமன்றத்தை கலைக்க முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.