குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பில், குறித்த வைத்தியசாலையின் அலுவலக சபையின் சாட்சிகளுக்கமைய, தயாரிக்கப்பட்ட அறிக்கையானது வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையானது குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரின் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்ட சுகாதார அலுவலக சபையின் 52 பேரின் சாட்சிகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வைத்தியர் ஷாபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது நாளை குருநாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.