சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது: அமைச்சர் வேலுமணி

328 0

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தூத்துக்குடியில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் 3 வாரங்களில் முடிக்கப்படும்.

செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது” என்றார்.