புகையிரதத்தில் மோதுண்டு 5 பேர் பலி

482 0

கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதன்போது5 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்
 சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்