சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.
திண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த கல்லூரியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20ம் தேதி நடைப்பெற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கல்லூரியின் துணை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய கல்லூரி வரலாற்றிலேயே திருநங்கை கல்லூரி யூனியனில் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது:
லயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரிதான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள்.

