ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலபாம் மற்றும் வென்னப்புவ பகுதியை சேர்ந்த இரு தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் இரண்டரை வயது குழந்தை ஒன்றும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் இன்று (24) அதிகாலை 8.40 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த நபர்களின் பயணப் பொதியில் இருந்து 483 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 96,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 5,313,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

