தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லையாம்!

392 0

ஈஸ்டர் ஞாயிறு குணடுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னரும் கூட வெளிநாடுகள்  இலங்கை மீது வைத்திருந்த  நம்பிக்கையை இழக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

 

பெற்றோலிய கூட்டத்தாபனத்துடன் இணைந்து மலேசியாவின்  ஐரெக்ஸ் எண்ணெய் நிறுவனத்தினால் வத்தளை முத்துராஜவலையில் அமைக்கப்பட்டுள்ள ஐரெக்ஸ் எண்ணெய் நிறுவனத்தின் திறப்பு விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஐரெக்ஸ் ஒயில் எஸ்டீஎன் பீஎச்டீ நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் டாடோ ஹஷிமா ஷைனுதின், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம்,பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜாங்கள அமைச்சர் அனோமா கமகே, மலேசியா உயர்ஸ்தானிகர் எச்.ஈ. டன் யங் தை மற்றும் பெற்றொலிய கூட்டத்தாபனத்தின் தலைவர் ஜி.எஸ்.விதானகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பொருளாதாரம் துரித வளர்ச்சி அடைய வேண்டும். தற்போதுள்ள சமுகத்தினர் நவீன மயப்படுத்தபட்ட பொருளதார வளச்சியையே விருகின்றனர். வெறுமனே வீதி அபிவிருத்திகள், நிவாரணங்களினூடாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. இவற்றினூடாக நாட்டை வளர்ச்சிப்பாதையை தீர்மானிக்கவும் முடியாது. முதலீடுகளையும் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.