திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (24) உத்தரவிட்டார்.
அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப் பாவனைக்கு அடிமையானவர் என்றும் திருடுவதற்கு சென்ற போது, 57 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி சென்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

