வெஸ்­ட்மி­னிஸ்டர் முறை­மையே ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும்: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

436 0

தேர்­த­லொன்­றுக்குச் செல்­வ­தாலோ அல்­லது அர­சி­ய­ல­மைப்பில் மீண்டும் திரு­த்தத்தினை கொண்­டு­வ­ரு­வ­தாலோ நாட்டில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற போக்­கினை மாற்­றி­ய­மைக்க முடி­யாது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ராசா தெரி­வித்தார். 

அனைத்து பெரும்­பான்மை கட்­சி­க­ளி­னது அர­சியல் உறு­திப்­பாட்­டு­டனும்,சிறு­பான்மை கட்­சி­களின் பங்­கேற்­பு­டனும்  நாட்டின் தேவைக்­கேற்ப சரி­செய்­யப்­பட்­டதும் காலத்தால் பரீட்­சிக்­கப்­பட்­ட­து­மான  வெஸ்ட்­மி­னிஸ்டர் முறை­மைக்கு திரும்பிச் செல்­வதன் நெருக்­க­டி­க­ளுக்கு தீர்­வினைக் கண்டு அர­சியல் ரீதி­யான ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

18ஆவது திருத்­தத்தின் ஊடாக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டமை ஜன­நா­ய­க­ம­ய­மாக்­கலின் அடிப்­ப­டையில் எழுந்த மக்கள் கோரிக்­கையின் விளை­வான ஒரு செயற்­பாடு அல்ல. மாறாக, அது  அந்த நேரத்தில் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஒரு அர­சியல் தலை­வரின் மன­வி­ருப்­பத்தின் நிறை­வேற்­ற­மே­யாகும்.

அது இலங்­கையின் ஜன­நா­ய­கத்தை, பிர­ஜை­களின் சுதந்­தி­ரங்­களை, உரி­மை­களை,  நீதித்­துறை உட்­பட ஜன­நா­யக நிறு­வ­னங்­களை சேதப்­ப­டுத்­தி­யது. அந்தச் சேதத்தில் இருந்து மீள்­வ­தற்­கான போராட்டம் பல்­வேறு வடி­வங்­களில் நடை­பெற்­றி­ருந்­தது.

குறிப்­பாக, நாட்டில் நில­விய இத்­த­கைய இருண்ட யுகத்­தினை அகற்றி ஜன­நா­யக விழு­மி­யங்கள் நிறைந்த கட்­ட­மைப்­புக்­களை வலு­வாக ஸ்தாபித்து பிர­யோக ரீதி­யான வெற்­றி­களை அடைந்து கொள்ளும் இலக்­குடன் 2015 ஜன­வரி 8ஆம் திக­திக்கு பின்­ன­ரான ஆட்­சி­யா­ளர்­களால் நடை­மு­றையில் உள்ள 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் 19ஆவது திருத்­தச்­சட்டம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

ஜன­நா­யக வெறுப்பை ஊட்­டு­கின்ற 18ஆவது திருத்­தத்­தினை நீக்கி விட்­ட­தாக கூறி­னாலும் ஒக்­டோபர் 26இற்கு பின்­ன­ரான நிலை­மை­க­ளி­லி­ருந்து தற்­போது வரையில் 19ஆவது திருத்­தமும் பின் கதவின் வழி­யாக கொண்­டு­வ­ரப்­பட்டு ஜன­நா­யகப் போராட்­டத்தின் பயன்கள் மறு­த­லிக்கும் வகையில் அதி­கா­ரத்தில் இருக்கும் தனி­நபர் ஒரு­வரின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்குள் சிக்கி நிற்­கின்ற நிலை­மை­களே தொடர்­வ­தாக உள்­ளன.

ஒக்­டோபர் அர­சியல் புரட்­சியின் பின்னர்   நிறை­வேற்­று அ­தி­காரம், சட்­ட­வாக்கம் மற்றும் நீதித்­துறை ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான வேறு­பா­டுகள் அதி­க­ரித்து மும்­முனை முட்­டி­மோ­தல்கள் எழு­ந­்தி­ருந்த நிலை­யில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின்  பின்னர் மீண்டும் அம்­மோ­தல்கள் தலை­தூக்கி  நாட்டின் ஸ்திரத்­தன்­மை­யையும் எதிர்­கா­லத்­தி­னையும் கேள்­விக்­கு­றி­யாக்கி உள்­ளது.

இறை­யாண்­மை­யை­ விட சக்தி மிகுந்த அதி­காரம் வேறு எதுவும் இல்லை என்­பதை பலர் மறந்­து­ விட்­டார்கள் என்ற கருத்­து­ரு­வாக்­கமும் தற்­போது வெகு­வாக மேலெ­ழுந்­துள்ள நிலையில் தற்­போ­தைய அதி­கா­ரப்­போட்­டிக்கு  என்ன தான் தீர்வு என்­பது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் வினா­வாக உள்­ளது.

இந்­நி­லையில், இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ரா­சா­வுடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது ஸ்திரத்­தன்­மைக்­காக தீர்­வு­களை நோக்கி பய­ணிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தி­னையும், யதார்த்த பூர்­வ­மா­னதும், நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­ன­து­மான விட­யங்­களை பகிர்ந்து கொண்டார். அவ்­வி­ட­யங்கள் வரு­மாறு:

யதார்த்த நிலைமை

1931 இல் சர்­வ­ஜன வாக்­கு­ரிமை  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து  படிப்­ப­டி­யாக நாம் பழக்­கப்­ப­டுத்­தப்­பட்ட  அர­சாங்க முறை­மையின் பிர­காரம் நாட்­டிற்கு அர­சியல் ஸ்திரத்­தன்­மையை  வழங்கும் நோக்கில் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெய­வர்­த­ன­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட  அர­சி­ய­ல­மைப்பு  இறு­தியில்  நாட்டை உறு­தி­குன்றச் செய்­வ­தற்கு வழி வகுத்­தது  என்­பதே யதார்த்­த­மாகும்.

ஏனெனில், அர­ச­ியலமைப்பு 1977ஆம் ஆண்டு தேர்­தலில் 5/4 பெரும்பான்­மை­யை ­கொண்ட ஜே.ஆர்.ஜெய­வர்­த­ன­விற்கு சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு அவ­சி­ய­மற்­ற­தாக இருந்­தது. இதனால் அவர் உரு­வாக்­கிய 1978 அர­சி­ய­ல­மைப்­பினை சர்வ வல்­ல­மை­களும் கொண்­ட­தாக உரு­வாக்க விழைந்தார். இந்த அர­சி­ய­ல­மைப்பின்  அரச முறைமை குறித்து விவா­தித்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, ‘பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் என்ற வெளிச்சட்­டையைப் போர்த்­திய யாப்பு ரீதி­யான ஜனா­தி­பதி முறை சர்­வா­தி­காரம்’ என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அது பிற்­கா­லத்தில் உண்மை என்­பது நிரூ­ப­ண­மா­கி­யது.

மேலும் இதனை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு உரு­வாக்­கப்­பட்ட   17 ஆவது திருத்­தமும் செய­லி­ழந்து போன­மையால், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை மிக வலி­மை­யா­ன­தாக உரு­வெ­டுத்­த­போதும் ஆட்­சிப்­பீ­டத்தில் இருந்த தனி­ந­பர்­களின் தனி­வி­ருப்­புக்­க­ளுக்குள் அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டதால் மிக இழி­வா­ன­தா­கவும் மாறி­வ­ரு­கின்­றது.

2018 ஆம் ஆண்டு  பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து  பொதுத் தேர்­த­லொன்­றுக்கு அழைப்பு விடுக்க  ஜனா­தி­பதி முயன்­ற­போது   அவ்­வாறு செய்­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு  அதி­கா­ர­மில்லை என்ற  அடிப்­ப­டையில்  பாரா­ளு­மன்றம் அதனை எதிர்த்­த­மையால்  இறு­தியில்  நாட்டின்  அதி உச்ச நீதி­மன்­றத்தில் அப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட்­டது.

51 நாட்கள் நாட்டில் நில­விய நிச்­ச­ய­மற்ற தன்­மை­யினால்  நாடு  கடு­மை­யாகப் பாதிப்­ப­டைந்த நிலையில் பல வரு­டங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் ஜனா­தி­ப­திக்கும்  பாரா­ளு­மன்­றத்­திற்கும் இடை­யி­லான  அதி­காரப் போட்டி உயிர்த்த ஞாயிறன்று பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பாக நடை­பெற்று வரும் பாரா­ளு­மன்ற விசா­ர­ணை­க­ளோடு மீண்டும் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது.

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ளிப்­ப­தற்கு  அழைக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு மற்றும் புல­னாய்வு கட்­ட­மைப்பின்  முக்­கிய  அதி­கா­ரிகள் சட்­ட­வாக்கத் துறைக்கும் நிறை­வேற்று நிர்­வாக துறைக்கும் இடையே உள்ள அதி­காரப் போட்­டியில் சிக்கித் தவிக்­கின்­றனர்.  ஒரு புறம் ஜனா­தி­பதி குறித்த அதி­கா­ரி­களை தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களில் பங்­கு­பற்ற வேண்­டா­மென  கண்­டிக்­கின்றார். மறு­புறம்  பாரா­ளு­மன்­றத்தின் கட்­ட­ளை­க­ளுக்கு கீழ்­ப­டி­யா­விடில்  ஏற்­ப­டக்­கூ­டிய  விளை­வுகள் பற்றி சபா­நா­யகர் அதே அதி­கா­ரி­க­ளையே எச்­ச­ரிக்­கின்றார். இதனால் திரி­சங்கு நிலைக்குள் தள்­ளப்­பட்­டி­ரு­க்கும் அரச அதி­கா­ரிகள்,  பாரா­ளு­மன்­றத்தின் கட்­ட­ளை­க­ளுக்கு கீழ்­ப­டி­யா­விடில்  ஏற்­ப­டக்­கூ­டிய பார­தூ­ர­மான விளை­வு­களை கவ­னத்தில் கொண்டு சாட்­சியம் அளிக்­கின்­றனர்.

எதிர்க்­கட்சித் தலைவர்  மஹிந்த ராஜ­பக் ஷ  இப்­பி­ரச்­சி­னையைத்  தீர்ப்­ப­தற்கு ஓர் உட­னடித் தேர்­த­லுக்கு வகை­செய்யும் மூன்­றி­லி­ரு­பங்கு உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வு­ட­னான  பாரா­ளு­மன்ற  வாக்­கெ­டுப்­பொன்­றிற்கு கோரிக்கை விடுத்த அதே­வேளை,  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான அர­சாங்கம் அமைச்­ச­ரவை கூட்­டங்­களை நடத்­து­மாறு ஜனா­தி­ப­தியை வற்புறுத்தி  பாரா­ளு­மன்ற தீர்­மா­ன­மொன்றை  முன்­மொ­ழிந்­தது.

இந்த செயற்­பாடு  நடை­பெற்று வரு­கையில், ஜனா­தி­பதி தனது எதிர்ப்பை வெளி­யிடும் வகையில்  வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்த மறுத்து  அர­சாங்­கத்தின் அனைத்து பிர­தான செயற்­பா­டு­க­ளையும்  தீர்­மானம் மேற்­கொள்ளும்  நடை­மு­றை­யையும் ஒரு தேக்க நிலைக்குக் கொண்­டு­வந்து பின்னர் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை கடந்த 18ஆம் திகதி கூட்­டினார்.

ஜே.ஆர் ஜெய­வர்­த­னவால்   உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் உட்­பொ­ருளை மாற்றி மிகக் குறு­கிய காலப்­ப­கு­தியில் அதி­க­ள­வான திருத்­தங்­க­ளினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தி­ருத்­தங்­களுள் பெரும்­பா­லா­னவை  பத­வி­யி­லி­ருந்­த­வர்­களின்  விருப்­பங்­க­ளுக்கு பொருந்­தக்­கூ­டி­ய­தாக செய்­யப்­பட்­ட­தே­யன்றி,  நாட்டின் நலனில்  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மக்கள் விருப்­புக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

19ஆவது திருத்­தமும் அதி­கார குறைப்பும்

2015ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி அவ­சர அவ­ச­ர­மாகத் தயா­ரிக்­கப்­பட்ட பத்­தொன்­ப­தா­வது  திருத்­தத்தில்   அடங்­கி­யுள்ள ஒரு சில  ஏற்­பா­டுகள்  தெளி­வா­ன­தாக இல்­லா­த­தோடு, ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்  வெவ்­வேறு அர­சியல் கட்­சி­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வார்­க­ளாயின், மீண்டும் மீண்டும்  குழப்ப நிலைக்கும்  கூடிய சட்டப் பிரச்­சி­னை­க­ளுக்கும் இட்டுச் செல்லும் வகை­யி­லேயே உள்­ளது.

மேலும் அந்த திருத்­தச்­சட்­டத்தில் ஜனா­தி­பதி தொடர்ந்து மக்­க­ளினால் நேர­டி­யாகத் தெரி­வு­செய்­யப்­படும் பொழுது  அவரே ஆட்சித் தலை­வ­ரா­கவும், ஆட்சித் துறை­யி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் தலை­வ­ரா­கவும் ஆயுதந் தாங்­கிய படை­களின் படைத்­த­லை­வ­ரா­கவும் அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரு­மாவார். இதனால் பத்­தொன்­ப­தா­வது    திருத்­தத்­தோடு  ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள்  பெரு­ம­ளவு குறைக்­கப்­பட்­டுள்­ளன என்றும்  அடுத்த ஜனா­தி­ப­திக்கு எந்­த­வொரு  அமைச்சர் பத­வி­யை­யும் வகிக்க முடி­யா­தி­ருக்­கு

மென்றும்  பெரும்­பாலும்  அவர் ஒரு சம்­பி­ர­தா­ய­பூர்வ  தலை­வ­ரா­கவே இருப்பார் என முன்­வைக்­கப்­படும்  வாதம் சட்­ட­ரீ­தி­யாக வலு­வி­லக்­கப்­ப­டு­கின்­றது.

நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை  அதி­கா­ர­பூர்­வ­மாக இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தோடு, 19ஆவது திருத்தம்   தொடர்­பான  தனது தீர்ப்பில்  உயர் நீதி­மன்றம் ஜனா­தி­ப­தியின் ஒரு சில அதி­கா­ரங்கள்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று இன்றி  நீக்­கப்­பட முடி­யாது என்று  விசே­ட­மாக குறிப்­பிட்­டுள்­ளது. இவ்­வாறு, ஜனா­தி­பதி பிறி­தொரு கட்­சி­யி­லி­ருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வா­ராயின்,  தற்­போது  நடை­பெ­று­வ­து போல்  பிர­த­மரின் அதி­கா­ரத்­திற்கு இடைஞ்­ச­லாக ஒரு தடையைப் போடு­வ­தற்கு அவ­ருக்கு கணி­ச­மா­ன­ளவு அதி­காரம் இருக்கும்.

தீர்­வுக்கு வழி உட­னடித் தேர்­தலா?

தற்­போது அர­சி­யலில் உள்ள முக்­கிய பிரச்­சி­னை­களை  அதா­வது,  அர­சியல் அமைப்­பிற்­கான  19ஆவது திருத்­தத்­தினால்  மேலும்  சிக்­க­ல­டைந்­துள்ள அர­சாங்க முறை­மையின்  உள்­ளார்ந்த தவ­று­க­ளி­லி­ருந்து எழும் பிரச்­சி­னை­களை தேர்­தலால் மாத்­திரம் தீர்க்க முடி­யுமா என்ற வினா எழு­கின்­றது. இருந்­த­போ­திலும் அவ்­வி­னா­விற்­கான விடை தற்­போ­தைய சூழ்­நி­லையில் சாத்­தி­ய­மா­காது .

எதிர்க்­கட்சித் தலைவர்  மஹிந்த ராஜ­பக் ஷ இப்­பி­ரச்­சி­னையைத்  தீர்ப்­ப­தற்கு ஓர் உட­னடித் தேர்­த­லுக்கு வகை­செய்யும் மூன்­றி­லி­ரண்டு பங்கு உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வு­ட­னான  பாரா­ளு­மன்ற  வாக்­கெ­டுப்­பொன்­றிற்கு கோரிக்கை விடுத்­துள்ளார்.எனினும் அதி­காரப் போட்­டியால் நாடு நாச­மா­கின்­றதை நாம் விரும்­ப­வில்லை என  மஹிந்­தவின் பங்­கா­ளிகள் கூட்­டாக தெரி­வித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்க்­க­மான முடி­வொன்றை உட­ன­டி­யாக எடுத்து நாட்டின் அர­சியல் உறு­திப்­பா­டற்ற நிலையை தீர்க்க உடன் தீர்­வு­வேண்­டு­மெனில் தேர்தல் ஒன்­றுக்கு செல்­வதே ஒரே­வழி என்றும் அழுத்­து­கின்­றனர்.

அதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­த­லுக்குச் செல்­வது தொடர்­பாக அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையே கலந்­து­ரை­யா­டல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் தக­வல்கள் தெரி­விக்­கின்­ற­போ­திலும் 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­திற்­க­மைய நான்­கரை வரு­டங்கள் முடி­யும்­வ­ரையில் ஜனா­தி­ப­தி­யினால் பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­மு­டி­யாது என்­ப­துடன், இதற்கு முன்னர் கலைக்க வேண்­டு­மெனில் பாரா­ளு­மன்­றத்தில் அது தொடர்­பான யோச­னையை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்ற வேண்டும்.

எவ்­வா­றா­யினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வின்றி மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­துடன்,  நாட்­டிற்கு ஏற்­படும்  விளை­வுகள் என்­ன­வா­க ­வி­ருப்­பினும், ஆட்­சியில் இருக்கும் அதி­கா­ரத்தை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி  துரித தேர்­த­லொன்றை நடத்­து­வ­தற்கு  இணங்­கு­வ­தென்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மொன்­றா­கவும் உள்­ளது. கடந்த காலங்­களில் நடை­பெற்­ற­து­ போல, நாட்­டிற்கு எவ்­வித பய­னு­மின்றி பல­வீ­ன­மான அர­சாங்­கத்தை சிறு­பான்மை கட்­சி­களின் ஆத­ரவை கொண்டு  ஆட்­சியை நகர்த்­திக்­கொண்டு போவதே நடை­மு­றைச்சாத்­தி­ய­மான விட­ய­மொன்­றா­க­வுள்­ளது என்றே வெளிப்­ப­டை­யாக கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

எதிர்­காலம் என்ன? 

இந்தச் சூழ்­நி­லையில், எதிர்­கால தேர்தல் ஒன்றில்  வெற்­றி­பெறும்  எந்­த­வொரு கட்­சியும் 19ஆவது திருத்­தச்­சட்ட முறை­மையை நாட்டின்  நலனைக் கருத்­தில்­கொண்டு  மாற்­றி­ய­மைக்­கு­மென  எதிர்­பார்ப்­பது  சிர­ம­மாகும்.  கடந்த காலத்தில் நாம் கண்­ணுற்ற போக்கு  நாட்­டிற்கு ஏற்­படும்  விளை­வு­களைப் பொருட்­ப­டுத்­தாது, வெற்­றி­பெ­றுவோர் தமது பதவிக் காலத்தில் தமது  பத­வியை  உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள  முய­லுவர் என்­ப­தாகும்.

தற்­போ­தைய சிக்­க­லான அர­சியல் சூழ்­நி­லையில் ஜனா­தி­பதித் தேர்­த­லையும்  பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் நடத்­து­வதும் இக்­கட்­டான நிலை­மை­யாகும்.  ஜனா­தி­பதி ஒரு கட்­சி­யி­லி­ருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வதும் பிறி­தொரு கட்சி பாரா­ளு­மன்­றத்தில்  பெரும்­பான்­மையைப் பெற்­றுக்­கொள்­கின்­ற­போது மீண்டும் இதே­போன்­ற­தொரு நிலை­மையில் நாடு மீண்டும்  சிக்கிக் கொள்ளும் போது மேலும் ஒரு மோச­மான, ஸ்திர­மற்ற நிலை­மையே உரு­வெ­டுக்கும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை.

தற்­போ­தைய ஸ்திர­மற்ற நிலை­யினால் அரசு மற்றும்  அர­சியல் முறைமை ஆகி­ய­வற்றின் மீதும் மக்கள் முழு­மை­யாக  சலிப்­ப­டைந்­துள்­ளமை கவ­னத்தில் எடுக்­கப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும்.

வெஸ்ட்­மினிஸ்டர் முறை­மையைப் போலன்றி,  தற்­போ­தைய பாரா­ளு­மன்ற முறை­மையின் கீழ்  ஜனா­தி­பதி பத­வி­யையும் உள்­ள­டக்கும்  அர­சாங்­கத்தை மாற்ற முடி­யாது. எனவே, தற்­போது நிலைமை போன்ற ஸ்திரத் தன்­மை­யற்ற போக்கே நீடித்துச் செல்­வ­தற்­கான சூழ­மை­வுகள் வலு­வாக காணப்­ப­டு­கின்­றன. இது மிகவும் ஆபத்­தா­ன­தாகும்.

தற்­போ­துள்ள  19ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்ள  ஜனா­தி­பதியின் அதி­கா­ரங்­க­ளுக்கு அமை­வாக அம்­மு­றை­மையைத் திருத்­து­வதன் மூலம் அல்­லது எமது நாட்டின் தேவைக்­கேற்ப சரி­செய்­யப்­பட்ட  காலத்தால் பரீட்­சிக்­கப்­பட்ட  வெஸ்ட்­மி­னிஸ்டர் முறை­மைக்கு திரும்பிச் செல்­வதன் மூலம் மட்­டுமே இதனைச் செய்­யலாம்.

எனினும், தற்­போ­தைய கள­நி­லையில் அனைத்து முக்­கிய அர­சியல்  செயற்­பாட்­டா­ளர்­களும் தேர்­தலைப் பார்க்­கின்­ற­மை­யினால்  இம்­மாற்­றங்­களில் ஏதா­வது ஒன்­றா­வது நடை­பெ­று­வ­தற்­கான  சாத்­தியம் இல்லை. இதற்­கி­டையே,  இப்­பி­ரச்­சி­னை­களுள் சில மேலும் தீவி­ர­ம­டைந்து நீதி­மன்­றங்­களில் முடி­வ­டையும்  சாத்­திய­மொன்று நில­வு­கி­றது.

மேலும், எதிர்­கா­லத்தில் தேர்தல் ஒன்றில்  வெற்­றி­பெறும்  எந்தவொரு  கட்சியும் நாட்டின்  நலனைக் கருத்தில்கொண்டு  அரசியலமைப்பு ரீதியான விடயங்களை மாற்றியமைக்குமென  எதிர்பார்க்கவும் முடியாது.   கடந்த காலத்தில் நாம் கண்ணுற்ற போக்கு  நாட்டிற்கு ஏற்படும்  விளைவுகளைப் பொருட்படுத்தாது, வெற்றிபெறுவோர் தமது பதவிக் காலத்தில் தமது  பதவியை  உறுதிப்படுத்திக்கொள்ள  முயலுவர் என்பதாகும்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சிக்கல்நிலை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டுமாயின்,  அனைத்துப் பிரதான கட்சிகளும்  ஒன்றிணைந்து  சில அரசியல்  உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு தேவையான  மாற்றங்களை செய்வதே  மிகவும் பொருத்தமான விடயமாகும். அதனைச் செய்வதற்கு பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வருவார்களா என்பதே எம்முன்னுள்ள பிரதான வினாவாகின்றது.

சிறுபான்மையினரின் வகிபாகம்

சிறுபான்மை சமூகங்கள் பரந்து வாழும் நாடுகளில் தேவைப்படுவது சமவுரிமை என்பதேயாகும். அப்படியான சமூகங்கள் தமது காத்திரங்களுக்கு  அமைவாக சட்டவாக்கத்திலும் நிறைவேற்று அதிகாரத்திலும் உரிய பிரதிநிதித்துவத்தைக் கேட்டு நிற்கின்றன. அத்துடன், சமவுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் பாரபட்சமற்ற நிலைப்பாட்டையும் வற்புறுத்துகின்றன.

இந்த நாட்டின் அரசியல்  உறுதிப்பாட்டைக் கொண்டு வருவதற்கு தேவையான  மாற்றங்களை கொண்டுவர வேண்டுமெனில், சகல அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு அவசியமெனினும் சிறுபான்மையினரின் வகிபாகம் அரசியலமைப்பு விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5/1 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சிறுபான்மையினரின் ஆதரவின்றி தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் அரசியலமைப்பை மாற்றக் கூடிய பெரும்பான்மையை ஒரு தனிக்கட்சி பெறுவது இந்த தேர்தல் முறையின்படி சாத்தியப்படக்கூடிய விடயமல்ல. ஆகவே, சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி தற்போதைய சிக்கல்நிலையை நிரந்தரமாக தீர்த்து விடமுடியாது.

நேர்காணல் : ஆர்.ராம்