வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு சிறை

344 0

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாது, திறந்த வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதனை இரண்டு வருட காலத்திற்கு யாழ்.மேலதிக நீதிவான் ஒத்திவைத்துள்ளார்.

குடிநீர் போத்தல்களை திறந்த வாகனத்தில் சூரிய ஒளி பட கூடியவாறும் , பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமலும் விற்பனையாளர் கொண்டு சென்றார் என சுகாதார பரிசோதகர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.மேலதிக நீதிவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்தார். அத்துடன் அவரிடமிருந்து மீட்கபட்ட 19 லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 13 மன்றில் பாரப்படுத்தினார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது விற்பனையாளர் தன் மீதான குற்றசாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , மேலதிக நீதிவான் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , 6 மாத சிறை தண்டனை வித்தித்து அதனை 2 வருடத்திற்கு ஒத்திவைத்தார்.