* விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது.

 

*ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்த நிலையில், விக்­னேஸ்­வ­ர­னையும் விட்டால், வேறு கதி­யில்லை என்ற கட்­டத்தில், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்­தது.

“நாங்கள் ஒன்று  சேர்ந்தால் சாதிக்க முடி­யா­தது ஒன்­றில்லை”- கடந்த 15ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் நடந்த சட்­டத்­த­ரணி க.மு.தர்­ம­ரா­சாவின் நினைவு நிகழ்வில் உரை­யாற்­றிய போது, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தை நோக்கி, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி.வி.விக்­னேஸ்­வரன் விடுத்­தி­ருந்த அழைப்பே இது.

தமிழ் மக்கள் பேர­வையின் அண்­மைய செயற்­குழுக் கூட்­டத்­திலும், கொழும்பில் நடந்த இந்தக் கூட்­டத்­திலும், உரை­யாற்­றிய சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் கூட்­டணி வைப்­ப­தற்­கான விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

தமிழ் மக்கள் பேர­வையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் அங்கம் வகிக்­கி­றது. ஆனால், அதன் கூட்­டங்­களை அண்­மைக்­கா­ல­மாக புறக்­க­ணித்து வரு­கி­றது.

எனவே, விக்­னேஸ்­வரன் பேர­வையில் அழைப்பை விடுத்­த­போது, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமோ அல்­லது அவ­ரது கட்­சி­யி­னரோ அங்­கி­ருக்­க­வில்லை.

ஆனால், கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் அவர் உரை­யாற்­றிய போது, மேடையில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் இருந்தார். விக்­னேஸ்­வ­ரனின் அழைப்­புக்குப் பதி­ல­ளிக்கும் வகையில் அவர் கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனாலும், ஊட­கங்­களில் விக்­னேஸ்­வ­ரனின் கருத்­துக்­களே பெரும்­பாலும் வெளி­யா­கி­யி­ருந்­தன. கஜேந்­தி­ர­கு­மாரின் கருத்­துக்­களை ஊட­கங்கள் கண்­டு­கொள்ள­வில்லை என்­பது  தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் வருத்தம்.

அதனை அடுத்­த­டுத்த நாட்­களில், யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், அந்தக் கட்­சியின் செய­லாளர் கஜேந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

ஒத்த கொள்­கை­யு­டைய, கொள்­கைப்­பற்­றுள்ள கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வது முக்­கி­ய­மா­னது என்­பதை, விக்­னேஸ்­வரன் வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதனை கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்­கிறார்.

இருந்­தாலும், இவர்­களின் இணை­வுக்குத் தடை­யாக இருப்­பது, விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னர் இருக்­கின்ற தரப்­புகள் தான் என்­பதை கஜேந்­தி­ர­குமார் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

விக்­னேஸ்­வ­ர­னையும், அவ­ரது தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யையும் ஏற்றுக் கொள்­ளவும், அத­னுடன் கூட்டு வைக்­கவும், கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தயா­ரா­கவே இருக்­கி­றது.

முன்­ன­தாக, தனி­யான கட்­சியை விக்­னேஸ்­வரன் ஆரம்­பித்­ததை, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி விரும்­ப­வில்லை. அதனை ஒரு போட்டிக் கட்­சி­யா­கவே- தமக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே, கஜேந்­தி­ர­குமார் தரப்பு கரு­தி­யது.

எனினும், விக்­னேஸ்­வ­ரன் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு எட்டு மாதங்கள் கடந்­துள்ள நிலையில், அதன் செயற்­பா­டுகள் பெரி­ய­ளவில், மக்­களைச் சென்­ற­டை­ய­வில்லை. அந்தக் கட்சி எந்­த­ள­வுக்கு மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெறும் என்ற நிச்­ச­ய­மற்ற நிலையே காணப்­ப­டு­கி­றது.

தமிழ் மக்கள் கூட்­டணி என்ற கட்சி வெறு­மனே விக்­னேஸ்­வரன் என்ற பிர­ப­லத்தை நம்பி மாத்­தி­ரமே தொடங்­கப்­பட்­டுள்­ளது. அவரைப் புறந்­தள்ளிப் பார்த்தால், அது பலத்­துடன் நிலை­பெறக் கூடிய சாத்­தி­யங்கள் அரி­தா­கவே தெரி­கின்­றன.

இது தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு ஆறுதல் அளிக்­கின்ற விடயம். தமக்கு – தமது எதிர்­கால அர­சி­ய­லுக்கு தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யினால் சவால் ஏற்­ப­டாது என்­பதை, கஜேந்­தி­ர­குமார் தரப்பு இப்­போது உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில், விக்­னேஸ்­வரன் என்ற ஆளுமை மற்றும் அவ­ருக்கு இருக்­கின்ற பெயர் ஆகி­ய­வற்றைக் கருத்தில் கொண்டு அவ­ருடன் கூட்­டணி வைத்துக் கொள்­ளவும், அவ­ருடன் இணைந்து செயற்­ப­டவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தயா­ரா­கவே இருக்­கி­றது.

ஆனாலும், இரண்டு தரப்­பு­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தடை­யாக இருப்­பது, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தரப்­பு­களே.

விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது.

விக்­னேஸ்­வரன் தனிக் கட்­சியை ஆரம்­பிக்க முடிவு செய்­த­போது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி அவ­ரி­ட­மி­ருந்து ஒதுங்க முடிவு செய்­தது. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் தான், விக்­னேஸ்­வ­ர­னுடன் ஒட்டிக் கொண்­டி­ருந்­தது.

ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்த நிலையில், விக்­னேஸ்­வ­ர­னையும் விட்டால், வேறு கதி­யில்லை என்ற கட்­டத்தில், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தம்மை ஏய்த்து விட்டுப் போன ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன், இணைந்­தி­ருக்கும், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் கூட்டு வைத்­துக்­கொள்ள கஜேந்­தி­ர­குமார் தரப்பு தயா­ராக இல்லை.

விக்­னேஸ்­வ­ரனும், தாங்­களும் இணைந்து செயற்­பட முடியும் என்றும், தமிழ் மக்­களின் நல­னுக்­காக பேரம் பேச முடியும் என்றும் கூறி­யுள்ள கஜேந்­தி­ர­குமார், ஆனால் அதனை குழப்பக் கூடிய தரப்­பு­களை உள்­வாங்க முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ் அர­சி­யலில் பிர­தி­நி­தி­க­ளாக இருந்து, இந்­தியா, மேற்­கு­லகின் எடு­பி­டி­க­ளாக இருந்து தமிழ் மக்­களின் நலன்­களைப் பலி­யிடும்  தரப்­பு­களை இந்தக் கூட்­ட­ணிக்குள் சேர்த்துக் கொண்டு தோல்­வி­ய­டையக் கூடாது என்று கஜேந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

இங்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கூற­வ­ரு­கின்ற விடயம். தனியே ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கு மாத்­திரம் பொருத்­த­மு­டை­ய­தன்று. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வில­கினால், மாற்று அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கின்ற கட்­சி­க­ளுக்கும் கூட இதற்குள் ஒரு செய்தி இருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், இப்­போதும் கூட முழு­மை­யான ஒற்­றுமை இருக்­கி­றது என்­றில்லை. ரெலோ அவ்­வப்­போது போர்க்­கொடி எழுப்பும். வெளியே போகப்­போ­வது போல பாவனை காட்டி அச்­சு­றுத்தும். புளொட் கூட வெளி­யேறப் போவ­தாக முன்னர் தக­வல்கள் வெளி­யா­கின.

விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான பல­மான மாற்று அணி ஒன்று உரு­வானால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விட்டு, தமி­ழ­ரசுக் கட்­சியின் பங்­கா­ளிகள் விலகிச் சென்று விடும் அபாயம் முன்னர் இருந்­தது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் நிலைப்­பாடு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான- தமிழ்த் தேசிய அர­சியல் நிலைப்­பாடு கொண்ட கட்­சி­களின் பரந்­து­பட்ட கூட்­டணி ஒன்று உரு­வா­வ­தற்­கான சாத்­தி­யங்­களை அருகிப் போகச் செய்­தி­ருக்­கி­றது.

கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் அண்­மைய ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பில், தம்மைத் தவிர மற்­றெல்லா கட்­சி­க­ளையும், இந்­தி­யா­வி­னதோ, இலங்கை அர­சி­னதோ முக­வர்கள் என்றே கூறி­யி­ருந்தார்.

கஜேந்­திரன் கடந்­த­வாரம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், ஏற்­க­னவே தமி­ழ­ர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக இருந்த- மேற்­கு­லக இந்­திய எடு­பி­டி­க­ளாக இருந்து,  தமிழ் மக்­களின் நலன்­களை பலி­யிட்­ட­வர்­களை சேர்த்துக் கொண்டு பய­ணிக்க தயா­ரில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இவர்கள் தமது அர­சியல் பய­ணத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வார்கள் என்றும், குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வார்கள் என்றும் அவர்கள் கரு­து­கி­றார்கள் என்­பதை விட, அவ்­வா­றான ஒரு கூட்டில், தாம் தனித்து விடப்­படும் நிலை ஏற்­படும், பல­வீ­னப்­ப­டுத்­தப்­படும் நிலை ஏற்­படும் என்ற அச்­சமே அவர்­க­ளிடம் அதி­க­மாக உள்­ளது.

தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் சேரும் போது சம பங்­கா­ளித்­துவம் கிடைக்கும். இன்னும் கட்­சி­களை சேர்க்கும் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பலம் குறையும் என்று அந்தக் கட்சி கரு­து­வ­தாக  தெரி­கி­றது.

விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில், தன்னை நம்பி வந்து விட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையோ ஏனைய தரப்­பு­க­ளையோ ஒதுக்கித் தள்ளி விட்டு, கஜேந்­தி­ர­கு­மா­ருடன் கூட்டுச் சேர்­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றாரா என்று தெரி­ய­வில்லை.

ஆனால், இரண்டு கட்­சி­களும் சேர்ந்து செயற்­பட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது. இல்லையேல் தாம் அரசியலில் காணாமல் போய் விடும் அபாயம் இருப்பதை அவர் உணருகிறார் போலும்.

க.மு. தர்மராஜா இருந்திருந்தால், இந்தக் கூட்டை உருவாக்க அழுத்தம் கொடுத்திருப்பார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பதானது, இரண்டு தரப்புகளையும் இணைத்து வைக்கும் வேலையைச் செய்யக்கூடிய, ஆளுமை கொண்ட தரப்பு ஒன்று, அவர்கள் மத்தியில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் கூட்டு அரசியலில் சாத்தியப்படுமா என்பதை- இரண்டு கட்சிகளினதும் கொள்கைகளோ, தலைமைகளோ, தமிழ் மக்களின் நலன்களோ மாத்திரம் தீர்மானிக்கவில்லை.

அதற்கு அப்பாலுள்ள புறச் சக்திகளே இந்த விடயத்தில் தீர்மானத்தை எடுக்கின்ற தரப்புகளாக இருக்கின்றன என்பதைத் தான், இந்த இடைவெளியில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.