ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

443 0

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் – அத்தாணியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு, ஈரோடு மாவட்டம் கங்காபுரம், கரூர் மாவட்டம் நொய்யல், தஞ்சாவூர் மாவட்டம் – திருப்புறம்பியம், திருநெல்வேலி மாவட்டம் – கரிசல்பட்டி, கரூர் மாவட்டம் – புலியூர்,

கடலூர் மாவட்டம் – கீழக் குப்பம் மற்றும் கோ.பூவனூர், தர்மபுரி மாவட்டம் – கீரைப்பட்டி, ராமகொண்ட அள்ளி மற்றும் மாவேரிப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் – நீரடி, கரூர் மாவட்டம் – அரவக்குறிச்சி மற்றும் உப்பிடமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் – முதுகுறுக்கி, இருதுக்கோட்டை, எக்கூர், பூனப்பள்ளி மற்றும் மத்திகிரி,

புதுக்கோட்டை மாவட்டம்- குளத்தூர் நாயக்கன் பட்டி மற்றும் மங்களா கோயில், சேலம் மாவட்டம் – சத்யாநகர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, திருவள்ளூர் மாவட்டம் – மிட்டனமள்ளி, சின்னம்பேடு மற்றும் காரம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் -அப்பேடு மற்றும் ஒண்ணுபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் – செங்கப்பள்ளி, திருச்சி மாவட்டம் – விடத்திலாம் பட்டி (அமையபுரம் கிராமம்), தூத்துக்குடி மாவட்டம் – ஆத்தூர், வேலூர் மாவட்டம் – மொரசப்பள்ளி, கீரைசாத்து, கரிக்கல், பள்ளிகொண்டா, உதயேந்திரம், உப்பரப்பள்ளி மற்றும் மோடிகுப்பம்,

விருதுநகர் மாவட்டம் – மம்சாபுரம் மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய இடங்களில் மொத்தம் 219 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மதுரை அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் 75 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமியர் தங்கும் வகையில் உணவருந்தும் கூடங்கள், வகுப்பறைகள், பணியாளர் அறைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு அறைகள், மருத்துவ அறைகள், உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லக் கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழுமக் கட்டிடம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கிப் பணிமனைகளில் அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று 2016-17-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலம் அரசு தானியங்கிப் பணிமனையில் கடந்த ஆண்டு அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள், வாகனங்கள் குறித்தான உரிய செய்முறை விளக்க உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.