அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை-அமரவீர

360 0

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்