இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

407 0

புகையிரத வேலை நிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை உயர்ந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

இதன்காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக பஸ் சேவைகளும் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் உபாலி மாரசிங்க கூறினார்.

உரிய பஸ் டிப்போக்கள், பிரதேச முகாமையாளர்களுக்கு இது தொடர்பில் உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அதற்குத் தேவையான எருபொருள், மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக உபாலி மாரசிங்க கூறினார்.