தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டது-அனந்தி(காணொளி)

686 0

எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐஸ் தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இந்த நாட்டினுள் கொண்டு வந்துள்ளார்கள். இந்த நிலைமை இலங்கையின் இறைமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இன்று  கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.