பஸ்ஸின் மூலம் கடத்தப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

32 0

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் சமண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இதுதொடர்பில் பஸ் சாரதியும் , நடத்துனரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

வேலணையை சேர்ந்த கால்நடை திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே  இவற்றை யாழ்நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள ஒருவருக்கு அனுப்பிவைத்ததாக நடத்துனர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இதன் அடிப்படையில் மேற்படி இருவரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.