சகோதரன் இறந்த அதே மரத்தில் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

80 0

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டுக்கு அண்மையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதை கண்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்த இளைஞரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த இளைஞரின் சகோதரன் ஒருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதே இளைஞர் தூக்கு மாட்டி தொங்கி இறந்த மரத்திலேயே தூக்கில் தொங்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.