கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை!

72 0

கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் அந்நாட்டு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

கேமரூன் நாட்டில் பிரிவினைவாத படைகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் ஆங்கிலம் பேசும் 2 பகுதிகளை கைப்பற்றியுள்ளோம் என அறிவித்தன.  இதனால் அந்த பகுதியில் வசித்த 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து புலம்பெயர்ந்தனர்.
தொடர்ந்து அந்நாட்டு படை வீரர்களுக்கும், பிரிவினைவாத படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.  இந்நிலையில் சமீபத்திய சண்டையில், அந்நாட்டின் ஆங்கிலோபோன் பகுதிக்கு வடமேற்கே புய் என்ற பகுதியில் 2 பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று கேமரூன் ராணுவ உயரதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.  பல வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.