ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மாணவன் இடம் பெற்றதன் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.

இதனை சிறுவன் திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பையை வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்தார். ஆசிரியை பையை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். சிறுவனின் நேர்மையைக் கண்டு வியந்தார்.
பின்னர் ஆசிரியை, முகமதையும் அவருடன் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் நடந்ததை சொல்லவே, மூவரும் ஈரோடு எஸ்பி சக்திகணேசனை காணச் சென்றனர். முகமதின் செயலைச் சொல்லி அந்த பையை எஸ்பியிடம் அவனையே கொடுக்கச் செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 2ம் வகுப்பு பாடபுத்தகத்தில் ஆத்திச்சூடியில் ‘நேர்பட ஒழுகு’ என்ற வாக்கியத்திற்கு சான்றாக முகமது செய்த செயல் அவனது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இது அந்த சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.

