அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிய சீக்கிய வீரருக்கு அனுமதி

618 0

அமெரிக்க விமானப்படையில் முதன்முறையாக டர்பன் அணிந்து கொள்ள சீக்கிய விரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் ஹர்பிரீந்தர்சிங் பஜ்வா. இவர் அமெரிக்க ராணுவத்தில் விமான படை வீரர் ஆக பணியாற்றுகிறார். அமெரிக்க நாட்டின் சட்டப்படி ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் தாடி வைத்து கொள்ளவும், தலைப்பாகை அணியவும் அனுமதி இல்லை.

ஆனால் பயிற்சி காலத்தின் போதே பஜ்வா தனது சீக்கிய மத அடையாளமான தாடி வைத்துக் கொள்ளவும், தலைப்பாகை அணியவும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற அமெரிக்க ராணுவ விமானப்படை அவர் தாடி வைத்து கொள்ளவும், தலைப்பாகை அணியவும் அனுமதி வழங்கியது.

இதனால் பஜ்வா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதன் மூலம் மத நம்பிக்கையுடன் நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்றார்.

இதன் மூலம் அமெரிக்க விமானப்படையில் தாடி மற்றும் தலைப்பாகையுடன் பணிபுரியும் முதல் சீக்கிய வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். தற்போது இவர் வாஷிங்டனில் உள்ள மெக்கோர்டு விமான படை தளத்தில் பணி புரிகிறார்.