மோடியின் வருகை தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வாகவே அமையும்-சிவஞானம்

260 0

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் பயணமாக நடப்பு நாடான இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இது இரு நாட்டிற்கும் இடையில் நல்லுறவினை வலுப்படுத்தும். இலங்கை வரும் அவர் பல தரப்புக்களையும் சந்திக்கவுள்ளளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அவர் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு முற்று முழுதாக நீண்டகாலமாக தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாகவே அமையும் என  சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துக்ககளை பகிரும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் பயணமாக நடப்பு நாடான இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இது இரு நாட்டிற்கும் இடையில் நல்லுறவினை வலுப்படுத்தும். இலங்கை வரும் அவர் பல தரப்புக்களையும் சந்திக்கவுள்ளளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பு முற்று முழுதாக நீண்டகாலமாக தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாகவே அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்வு விடயத்தில் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றார். தமிழர்களின் இனப்பிரச்சினை, அதிகார பரவலாக்கம், தீர்வு போன்ற விடயங்களில் உலக தலைவர்களை சந்திக்கும் போது ஆக்கபூர்வமான சந்திப்புக்களை மேற்கொள்ளவதுடன் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இடித்துரைத்து வருகின்றார். அதேபோல இந்த சந்திப்பு நிச்சயமாக பலன் உள்ளதாக அமையும்.குறிப்பாக இந்தியாவின் ஆதரவு இனப்பிரச்சினை விடயத்தில் முக்கியமாக உள்ளது.

எனவே இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசியல் தீர்வு விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நிச்சயம் ஆராயப்பட்டு தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்றார்.