மரக்காலைகளை நிறுத்துவதை விட மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்-ராஜித

436 0

மரங்கள் வெட்டத்தடை விதிப்பதன் மூலமும் மரக்காலைகளுக்கு மூடுவிழா என்ற அறிவுப்புக்களின் மூலமும் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என சுகாதார அமைச்சர் ராஜிதமரங்கள் வெட்டத்தடை விதிப்பதன் மூலமும் மரக்காலைகளுக்கு மூடுவிழா என்ற அறிவுப்புக்களின் மூலமும் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் மரங்கள் வெட்டத்தடை,மரக்காலைகளுக்கு மூடுவிழா என்றால் இறந்தவர்களின் உடல்களை இனிமேல் நாம்  அலுமினியப்பெட்டிகளில் வைத்தா அடக்கம் செய்வது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்  பிமல் ரத்னாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மரக்காலைகளை நிறுத்துவதனை விட மரங்கள் வளர்ப்பதனையே ஊக்குவிக்க வேண்டும். பழைய மரங்களை வெட்டும் அதே நேரம் புதிய மரங்களை நாட்ட ஊக்குவிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.