மத்துகம பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம – அளுத்கம வீதியில் மத்துகம நோக்கி சென்ற கெப் ரக வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தக்குள்ளானது. இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் குடுகல்வல – தவலம பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கெப் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

