மன்னார் கடற்பரப்பில் வடமத்திய கடற்படையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது 140.760 கிலோ கிராமுடன் மீன் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் – பேசாலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நங்கூரமிடப்பட்டிருந்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா தொகை மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

