இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி பெறும்- உலக வங்கி கணிப்பு

409 0

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில் (2019  ஏப்ரல் 1ம் தேதி முதல், 2020 மார்ச் 31 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டுள்ளது. அதன்பிறகும்  வளர்ச்சி நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
“வலுவான முதலீடு மற்றும் தனியார் நுகர்வு உள்ளிட்ட காரணங்களால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். மேலும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா தக்கவைத்துக் கொள்ளும். சீனாவின்  பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ல் 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்த ஆண்டு 6.2 சதவீதமாக குறையும். அதன்பின்னர் 2020-ல் 6.1 சதவீதமாகவும், 2021-ல் 6 சதவீதமாகவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2021ம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி 1.5 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.