கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா

310 0

கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் அவருக்கான இந்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டு பதவிப்பிரமாணம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஷான் விஜயலால் டி சில்வா தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள், கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லாவின் பதவி விலகலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்து பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில், தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.